Thursday, January 23, 2025

இரண்டாம் கட்ட தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது

இலங்கைக்கு மேலும் 5இலட்சம் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் இருந்து இன்று வந்தடைந்தது.
ஒக்ஸ்பேர்ட் எஸ்ட்ரா செனிகா கொவிட்சீல்ட் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டு எயார் இந்தியா விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்ததாக விமான நிலைய முகாமையாளர் சாரானாத் பீரிஸ் தெரிவித்தார்.
இந்தியாவின் சென்னை மாநகரில் இருந்து இந்திய விமானமான ஏ ஐ 273இன் ஊடாக மத்தியானம் 1.30 மணியளவில் இந்தத் தடுப்பூசி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.
இந்தத் தடுப்பூசியானது குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலையில் வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டதுடன்இ விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு உடனடியாக ஏற்றுமதி விமான பொருட்கள் களஞ்சியசாலை கட்டிடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பூசிகள் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான விசேட குளிரூட்டி வசதிகள் கொண்ட லொறிகள் ஊடாக பிரதான களுஞ்சியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles