Thursday, January 23, 2025

உண்மையான தகவல்களை வெளியிடுங்கள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

கொரோனா வைரசினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த உண்மையான விபரங்களை வெளியிடுமாறு அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனாவைரசினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த உண்மையான விபரங்கள் வெளியிடப்படாததன் காரணமாக சுகாதார பணியாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனாவைரசினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிபரங்களில் குறிப்பிட்டளவு எண்ணிக்கையான உயிரிழப்புகள் சேர்க்கப்படவில்லை என சுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர் எனவைத்தியர் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரசினால் நபர் ஒருவர் உயிரிழக்கும்போது அவரின் இறப்பு தேசிய புள்ளவிபரங்களில் சேர்க்கப்படாவிட்டால் குடும்பத்தினரிற்கு அவர் கொரோனாவைரசினால் உயிரிழந்தாரா என்ற சந்தேகம் எழுவது இயல்பு என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles