Monday, December 23, 2024

கிழக்கு முனையம் இலங்கையின் கட்டுப்பாட்டில்

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் முழுமையாக இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உறுதியளித்துள்ளார்.
கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கங்களின் கூட்டணியுடன் நேற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போதே பிரதமர் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார். அலரி மாளிகையில் நேற்று முற்பகல் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அரசாங்கத்தின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்கக் கூடாது என்ற கொள்கைகளுக்கமைய கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எந்தவொரு நாட்டிடமும் கையளிக்க மாட்டோம் என்று இதன்போது பிரதமர் கூறியுள்ளார்.

இதனுடன் தொடர்புடைய அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்பிக்கவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles