Thursday, January 23, 2025

சுகாதார அமைச்சர் அங்கொடை தொற்று நோயியல் மருத்துமனையில்

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு அங்கொடை தொற்று நோயியல் மருத்துமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா தொற்றுக்குள்ளான அமைச்சர் ஹிக்கடுவையில் அமைந்துள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர் நேற்றைய தினம் திடீரென தொற்று நோயியல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எனினும் அவர் கொவிட் தொற்று அறிகுறிகள் அதிகளவில் வெளிப்படுத்தப்பட்ட காரணத்தினால் தான் கொழும்புக்கு மாற்றப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதுடன் அவர் குணமடைந்து வருவதாக தெரிவித்தது.
எவ்வாறாயினும், அமைச்சரின் கணவரான காஞ்சன ஜெயரத்ன மற்றும் அவரது மகள் மீது நேற்று நடத்தப்பட்ட கொவிட் பரிசோதனைகள் எதிர்மறையான முடிவுகளை காட்டியமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles