Thursday, January 23, 2025

சுதந்திர சதுக்கத்தை சுற்றி வாகன போக்குவரத்துக்கு தடை

கொழும்பு சுதந்திர சதுக்கத்தை சுற்றிய பகுதிகளில் எதிர்வரும் ஜனவரி 30 முதல் பெப்ரவரி 4 ஆம் திகதி வரை வாகன போக்குவரத்து தடை செய்யப்படும் என பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

சுதந்திர தினத்திற்கான ஒத்திகை மேற்கண்ட காலப் பகுதியில் நடைபெறவுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிருபமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

இதன் காரணமாக சுதந்திர சதுக்கத்தை அண்மித்த வீதிகள் மற்றும் இணைக்கும் வீதிகளினூடான போக்குவரத்து நடவடிக்கை தடைசெய்யப்படும்.

ஒத்திகை நாட்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் சுதந்திர தினத்தன்று அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் இவ்வாறு போக்குவரத்து தடைசெய்யப்படும் எனவும் குறிப்பிடபப்ட்டுள்ளது.

இதேவேளை இந்த நாட்களில் தாமரைத் தடாகத்திற்கு அருகே வீதியின் ஒரு பகுதியும் போக்குவரத்துக்காக மூடப்படவுள்ளதாக கூறியுள்ள பொலிஸார் , இந்த காலகட்டத்தில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles