Monday, December 23, 2024

அல்ஷவாஜ் சஞ்சிகை வெளியீடு

திருமணம்,  விவாக விடயங்கள் தொடர்பான தகவல்கள், திட்டமிடல்கள் அடங்கிய முதலாவது சஞ்சிகை “அல்ஷவாஜ்” இம்மாதம் (31) இல், வெளிவருகிறது. இஸ்லாமிய கலாசாரம் மற்றும் நவீன சிந்தனைகளிலான திருமண நடைமுறைகளை, இச் சஞ்சிகை உள்ளடக்கியுள்ளமை, இதன் விஷேட அம்சமாகும். சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் பாத்திமா சஸ்னா தலைமையில், கொழும்பு 06 கிறீன் பலேஸ் டபிள்யு,ஏ சில்வா மாவத்தையில், மாலை 4.30 மணிக்கு  இதன் வெளியீட்டு வைபவம் இடம்பெறும். டவர் ஹோல் நிலையத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹாஸிம் உமர், இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ள உள்ளார். மேலும், கௌரவ அதிதிகளாக டொக்டர் திருமதி பரீனா ருஸைக், ஹனா இப்றாஹீம் ஆகியோரும் கலந்து சிறப்பிப்பர். திருமதிகளான பவாஸா தாஹா, மபாஸா பாரூக் மற்றும் செல்வி இமாஷா டில்ஷானி ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் இதில் கலந்து கொள்வர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles