நானுஓயாவில் இருந்து நுவரெலியா வரையான கேபள் கார் முறைமை வேலைத்திட்டம் துரிதப்படுத்தியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இவ்வேலைத்திட்டத்திற்காக 52மில்லியன் யூரோ முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், கேபள் கார் திட்டம் நாட்டின் 6059இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 318 இடங்கள் நுவரெலியா மாவட்டத்தை மையப்படுத்தியது.
இந்த வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்து பிரச்சாரம் செய்யவும், நுவரெலியா மாவட்டத்தை சுற்றுலா வலயமொன்றாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.