Thursday, January 23, 2025

நிலக்கீழ் சுரங்கங்களில் கோடிக்கணக்கான பணம் பொலிஸாரால் கண்டுபிடிப்பு!

இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் நாளாந்தம் கோடிக்கணக்கான பணத்தை நிலக்கீழ் சுரங்கத்தில் பதுக்கி வைப்பதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
நாளாந்தம் குறைந்தபட்சமாக மூன்று கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணம் இவ்வாறு பதுக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.

குறித்த பணத்தை வங்கிகளில் வைப்பிட முடியாமல் இரகசியமாக நிலத்தில் மறைத்து வைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

போதைப்பொருள் விற்பனை செய்யும் பணத்தை வங்கிகளில் வைப்பிலிடும் கணக்குகளை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களில் வங்கிகளில் பணம் வைப்பிலிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது

நாட்டில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் இலட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 3 கிலோ கிராம் வரையான போதை பொருள் தேவைப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளை வேறு முறையில் பக்கட்களில் அடைத்து சில்லறை கடைகளில் விற்பனை செய்வதற்கு வழங்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இதன்மூலம் கிடைக்கும் பணம் வேறு நபர்களின் பெயர்களில் வைப்பிலிப்படப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பதுக்கி வைக்கப்பட்ட பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இதற்கு முன்னர் கிடைத்த வருமானங்களை கொண்டு சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்டது. எனினும் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுவதனால் இவ்வாறு நிலத்திற்குள் சுரங்கம் அமைத்து பணத்தை பதுக்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles