பொருளாதார சவாலில் வெற்றிபெற

0
276

சுற்றுலா, வெளிநாட்டு முதலீடுகள்

அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் அவசியம்

இராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா

கொவிட் 19 பரவலினால் உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் இலங்கை வெற்றிபெறுவதற்கு சுகாதார வழிகாட்டலுக்கு முன்னுரிமை வழங்கும் அதேவேளை> வெளிநாட்டு சுற்றுலா கைத்தொழிலையும் இலங்கையில் முதலீடுகளுக்கான சந்தர்ப்பத்தினையும் விஸ்தரிக்க வேண்டுமென கிராமிய வீதி மற்றும் விசேட உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த 22ஆம் திகதி வத்தளை பிரதேச சபை உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அவர்களின் “வளமான நோக்கு” தேசிய வேலைத்திட்டத்தினை எதிர்வரும் நான்காண்டில் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி செய்வதன் ஊடாக மக்களின் பொருளாதாரம் மேம்படும் என்பதன் காரணத்தினால் தான் இம்முறை வரவு செலவு திட்டத்தில் கிராமிய பொருளாதாரத்துக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்கள் திறக்கப்பட்டதனால் வெளிநாட்டில் தங்கியிருக்கும் எமது உறவுகளுக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறே> நமது நாட்டில் சுற்றுலா துறையுடன் நேரடியாக வருமானம் உழைக்கும் 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வாழ்வாதாரத்தை மேலும் சிறப்பாக முன்னெடுக்க சந்தர்ப்பம் கொண்டுள்ளனர்.

வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டலுக்கு அமைய சுற்றுலா துறையை மேம்படுத்தும் அதேவேளை> நாட்டு மக்கள் கொவிட் 19இல் பாதுகாப்புடன் இக்கைத்தொழிலை முன்கொண்டு செல்வதே அரசின் நோக்கமாக இருக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரத்தில் உள்ள வத்தளை நகர சபையில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் இருப்பதாக அறியக் கிடைத்துள்ளது. இதற்கான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளோம். அவ்வாறே> கொழும்புக்கு மிக அருகில் காணப்படும் நகரமாக காணப்படுவதால் நாட்டின் பொருளாதாரத்துக்கு நேரடி பங்களிப்பை செலுத்துவதற்கான இந்நகரை மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது.

இதற்காக மக்களின் காணி பிரச்சினையை தீர்ப்பதற்காக விசேட வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே, கம்பஹா மாவட்டத்தின் வடிகான் கட்டமைப்பு> மதகு சீர்த்திருத்தம் உட்பட மேலும் பல திட்டங்கள் அபிவிருத்தி செய்யப்பட உள்ளதுடன்> வெள்ளத்தினால் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here