இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசி இன்றைய தினம் ஐடிஎச் வைத்தியசாலை சுகாதார ஊழியர்களுக்கு உத்தியோகபூர்வமாக ஏற்றப்படும் என கொவிட் முதல்நிலை சுகாதார சேவைகள் மற்றும் தொற்றுநொய், கொவிட் வைரஸ் கட்டுப்படுத்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபிள்ளை தெரிவித்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, கொழும்பு தெற்குபோதனா வைத்தியசாலை, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை, ஹோமாஹம ஆதார வைத்தியசாலை, முல்லேரியா வைத்தியசாலை மற்றும் தொற்றுநோய் வைத்தியசாலை ஆகியவற்றில் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து சுமார் ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் நேற்யை தினம் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதுடன் இவை ஐந்து நாட்களில் தெரிவு செய்யப்படும் நபர்களுக்கு பகிர்ந்தளிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்