Monday, December 23, 2024

வெளிநாட்டில் தங்கியிருப்போருக்கு இலவச விமான டிக்கட்

வெளிநாடுகளில் தொழில்வாய்ப்பின்றி தங்கியிருக்கும் இலங்கையர்களை விரைவாக கொண்டுவருவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றவர்கள், மீண்டும் நாட்டுக்கு வருவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். சிலர் விமானச் டிக்கடுகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் தங்கியுள்ளனர். இதனைக் கருத்திற் கொண்டு பணியகத்தின் ஊடாக விமானச் டிக்கடுகளை வழங்குவதற்கு தாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles