அமைச்சரவையின் 99வீதமானோர் எதிர்ப்பு

0
994

இலங்கை துறைமுக அதிகாரசபையின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டு நாடுகளுக்கு விற்பனை செய்வதை அமைச்சரவையின் 99வீதமானோர் எதிர்ப்பு என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தங்காலை, கால்டன் இல்லத்தில் ஊடகவியலாளர்களுடன் சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தொழிற்சங்கத்தினர் என்னிடம் வந்தால் நான் அவர்களுக்கு உண்மை நிலையை தெளிவுபடுத்துவேன் என பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை எவருக்கும் விற்பனை செய்யவோ அல்லது குத்தகைக்கு விடவோ அரசாங்கம் எந்த ஒரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கை துறைமுக அதிகாரசபையின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டு நாடுகளுக்கு விற்பனை செய்வதை அமைச்சரவையின் 99வீதமானோர் எதிர்ப்பு என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தங்காலைஇ கால்டன் இல்லத்தில் ஊடகவியலாளர்களுடன் சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். கொழும்பு துறைமுகம் எமது நிர்வாகத்தின் கீழேயே உள்ளது. தொழிற்சங்கங்களும் அதனை அறியும்.

அந்த நிலையில் அந்த முனையத்தை விற்பது அல்லது குத்தகைக்கு விடுவது தொடர்பில் நாம் இதுவரை பேச்சுவார்த்தை கூட நடத்தவில்லை. அதனால் அதனை சிக்கலுக்குள்ளாக்கத் தேவையில்லை. வேலைநிறுத்த போராட்டங்களும் அவசியமில்லை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here