மணமகன், மணமகளுக்கு கொவிட் தொற்று

0
711

அம்பன்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் மணமகன், மணமகள் உட்பட நிகழ்வில் பங்குற்றிய 136 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அம்பன்பொல பிரதேசத்தில் ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்ற திருமண நிகழ்வின் பின்னர் மணமகன் மற்றும் மணமகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவ்வாறே, இவர்களுடன் நேரடியாக தொடர்புகளைப் பேணிய மேலும் 136பேருக்கு கொரோனா பரவியுள்ளமை கண்டறியப்பட்டது.
இந்த திருமண நிகழ்வு தேதவ பிரதேசத்தில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றதுடன் மணமகள் அம்பன்பொல உடங்காவ பிரதேசத்தைச் சேர்ந்தவர். மணமகன் மினுவங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று சுகாதார பிரிவினர் தெரிவித்தனர். திருமண நிகழ்வின் இரண்டாம் நிகழ்வு மினுவங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் 260 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here