கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 11 பேருக்கு கொவிட் தொற்று

0
314

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சேவையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் 11பேருக்கு கொவிட் வைரஸ் தொற்றுக்கு இழக்காகியுள்ளதாக வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இவ்விதம் தொற்றுக்குள்ளானவர்கள் ஜாஎல பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்கு அப்பிரதேசத்தில் இருந்தே தொற்றுக்கு ஆளாகினார்கள் என்றும் நிறுவனத் தலைவர் தெரிவித்தார்.

கொவிட் தொற்றுக்கு உள்ளான அனைவரும் தங்கள் வீட்டிலேயே சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதே வேளை, இவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளார்கள்.

அவ்வாறே, விமான நிலையத்தில் கடமைப்புரியும் மேலும் 140பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here