Friday, May 17, 2024

இந்தியாவின் தடுப்பூசி இலங்கை மக்களுக்கு

ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ராசெனகா கொவிட் தடுப்பூசியை இலங்கையில் அவசர உபயோகத்துக்கு தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.

இதனடிப்படையில் இந்தியாவில் தடுப்பூசி எதிர்வரும் வாரத்தில் இலவசமாக இலங்கை மக்களின் பாவனைக்கு வழங்கப்படும் என்று உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.

உலகளாவி ரீதியில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 நோய்த்தொற்றுக்கு சிறப்பான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் முழு மூச்சுடன் செயற்பட்டு வருகின்றது.

இதன் முயற்சியாக பல நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதுடன், மக்களுக்கு பயன்படுத்தவும் ஆரம்பித்துள்ளன.

இவற்றில் அதிக மக்கள் அவதானத்தைப் பெற்ற அமெரிக்காவின் பைசர் பயோடெக் மற்றும் மொடெர்னா, இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனெகா, ரஷ்யாவின் ஸ்புடினிகா பைவ் மற்றும் சீனாவின் உற்பத்தியான பினபொம் ஆகியவை அடங்குகின்றன.

இவற்றில் 95வீத பாதுகாப்பு மிக்க அமெரிக்காவின் பைசர் பயோடெக் தடுப்பூசி அவசர உபயோகத்திற்காக உலக நாடுகள் பலவற்றில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

எவ்வாறாயினும் இந்தியாவின் ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ராசெனகா கொவிட் தடுப்பூசியை இலங்கையில் அவசர பயன்பாட்டுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்க இந்திய அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles