Monday, December 23, 2024

விமல் வீரவன்ச பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்

பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு வழங்க வேண்டுமென சிங்கள நாளிதழுக்கு நேர்காணல் வழங்கிய அமைச்சர் விமல் வீரவன்ச பொதுமக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டுமென கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கடுந்தொணியில் குறிப்பிட்டார்.

கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்இ பொதுஜன பெரமுன தொடர்பாக எவ்விதமான தீர்மானங்களையும் மேற்கொள்ளும் உரிமை விமல் வீரவங்சவிற்கு இல்லை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

எனவே அவருடைய அறிவிப்பு குறித்து பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதுடன் அந்த கருத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூறியுள்ளார்.

கூட்டணியில் இணைந்துகொண்ட ஒருவர் மிக கீழ்த்தரமான அறிவிப்பொன்றை விடுத்துள்ளமை குறித்து கட்சி என்ற வகையில் கவலையடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles